கீவ் நகரில் நேற்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் பத்திரிக்கை செயலாளரை மேற்கோள் காட்டி, சிஎன்என் செய்தி சேவை, ஜனாதிபதியின் கார் மற்றும் அவரது துணை வாகனங்கள் மீது மற்றொரு கார் மோதியதாக தெரிவிக்கிறது.
விபத்தில் ஜனாதிபதிக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
உக்ரைன் இராணுவத்தால் மீளக் கைப்பற்றப்பட்ட இசியம் நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இந்த விபத்தை சந்தித்துள்ளார்.