Thursday, Jan 16, 2025

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட நால்வரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை

By Jet Tamil

வவுனியா – குட்ஹெட் வீதியிலுள்ள வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட நால்வரின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

 42 வயதான தந்தை, 36 வயதான தாய், 9 மற்றும் 3 வயதான சிறுமிகளின் சடலங்களிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், அவற்றை இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சட்ட மருத்துவ அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் குறித்த சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனினும், பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான தெளிவான காரணம் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நால்வரது சடலங்களும் வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள  வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு