Friday, Jan 17, 2025

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு

By Jet Tamil

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் இருந்து 50 கிலோ, 463 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கஞ்சா பொதிகள் சவுக்கடி காட்டுப் பகுதியில் ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு