Welcome to Jettamil

ஒடிசா தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியானது!

Share

ஒடிசாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா தொடருந்து விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடருந்து, சரக்கு தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு தொடருந்துகளும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து ஒடிசா பாலாசோர் தொடருந்து நிலையம் அருகே
127 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக சரக்கு தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்துக்குள் சென்றுள்ளது.
இதனையடுத்து அந்த தொடருந்து, சரக்கு தொடருந்தை மோதிய நிலையில் சரக்கு தொடருந்தின் பெட்டிகள், அருகில் உள்ள தண்டவாளத்துக்குள் தூக்கியெறியப்பட்டன.

இதன்போது, மறுபுறத்தில் பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேக தொடருந்து
தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் கிடந்த சரக்கு தொடருந்து பெட்டிகளுடன் மோதி பாரிய விபத்தை சந்தித்துள்ளது.
இந்நிலையில் ஒடிசாவுக்கு சென்ற பிரதமர், சம்பவ இடத்துக்கு சென்று நிவாரணப்பணிகளையும் கள நிலவரத்தையும் ஆய்வு செய்தார்.
அத்துடன், விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் உறுதியளித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை