Welcome to Jettamil

தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் மொஸ்கோவுக்குப் புறப்பட்டது

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோபுளொட் விமானம், நேற்று மாலை மொஸ்கோ நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றம், முந்தைய தடை உத்தரவை நேற்று மாலை 6 மணிக்கு இடைநிறுத்தியதை அடுத்து, ஏரோபுளொட்  விமானம் மொஸ்கோவிற்கு புறப்பட்டது.

நேற்றைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நிலைமையை விரைவாகத் தீர்த்து வைப்பதில் பங்குபற்றிய இலங்கையின் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏரோபுளொட் விமானம் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, கொழும்புக்கான விமான சேவைகளை இடைநிறுத்திய ரஷ்யா, தனது நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் திடீரெனத் திருப்பி அழைத்தது.

மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதுவரை அழைத்துக் கண்டித்த ரஷ்யா,இராஜதந்திர ரீதியாகவும் கொழும்புக்கு நெருக்கடியை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை