உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படும்…! தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
உரிய தினத்தில் ஜனாதிபதி தேர்தலானது நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.
இந் நிலையில், ஜனாதிபதி தேர்தலானது எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.