இன்று முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தொலைத்தொடர்பு வரியும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாட் வரியும் கடந்த 1ம் திகதி முதல் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாகவே இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.