அடுத்த மாதம் முதல் யூரியா மூட்டை ஒன்று 10,000 ரூபா விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவித்து அங்கு விரைவாக விவசாயத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நேற்று அமைச்சரைச் சந்தித்ததன் பின்னர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.