Welcome to Jettamil

பயிரிடப்படாத நிலங்களை 5 ஆண்டுகளுக்கு கைப்பற்றுகிறது அரசாங்கம்

Share

நாடு முழுவதும் உள்ள, பயிரிடப்படாத அல்லது கைவிடப்பட்ட வயல் நிலங்கள், உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காக, ஐந்து வருட காலத்திற்கு அரசாங்கத்தினால் கைப்பற்றப்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறான காணிகள் கமநல சேவைகள் திணைக்களத்தினால் இனங்காணப்பட்டு, காணி இல்லாதவர்களிடம் பயிர்ச்செய்கைக்காக ஒப்படைக்கப்படும்.

இந்தக் காணிகளில் உணவுப் பயிர்களை பயிரிடும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் காணப்படுவதாகவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை