பத்து பொருட்களுக்கான, திறந்த கணக்கு உணவு இறக்குமதியை இலங்கை அரசாங்கம் தளர்த்தலாம் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
திறந்த கணக்குகளைத் தடை செய்யும் வர்த்தமானி நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், துறைமுகங்களுக்கு கொண்டு வரப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பது குறித்து, நான் மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடினேன் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியிலிருந்து 180 மில்லியன் டொலர்கள், அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்கப் பயன்படுத்தப்படும்.
திறந்த கணக்கு இறக்குமதிகள், விநியோகஸ்தர்கள் கடனில் உணவுப் பொருட்களை அகற்ற அனுமதிக்கின்றன.
அந்தக் கடன் அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் பின்னர் தீர்க்கப்படும்.
அரிசி, கோதுமை மா, சீனி, உருளைக்கிழங்கு, சிவப்பு பருப்பு, வெங்காயம், செத்தல் மிளகாய், மீன், பீன்ஸ் மற்றும் பால் மா ஆகிய அத்தியாவசிய பொருட்களே, திறந்த கணக்குகளின் கீழ் அனுமதிக்கப்படும்.