Welcome to Jettamil

பாணை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் – நாட்டின்  அவலம் 

Share

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் பாணை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அத்தியாவசிய உணவாயுப்பொருள்களின் விலைகளும் அவ்வப்போது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாளாந்த உணவுத்தேவையை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையில் உணவுப்பொருட்களை திருடும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.அத்தகைய சம்பவம் ஒன்று யாழ் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

2 இறாத்தல் பாணுடன் கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்த முதியவர் ஒருவரிடம் இருந்து சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள்  அவரது பாணை பறித்துச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இது குறித்து அந்த முதியவர் தெரிவிக்கையில், நாட்டில் கடும் வறுமை நிலவினாலும் 2 றாத்தல் பாண் வாங்குவதற்கு என்னிடம் கேட்டிருந்தால், நான் ஒரு நாள் பட்டினி கிடந்தாலும் அவர்களுக்கு வழங்கியிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நாட்டின் தற்போதைய அவளை நிலையை தெளிவாகக் காட்டுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் இன்னும் எத்தனை அவலச்சம்பவங்களை உண்டாக்கவுள்ளதோ தெரியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை