Welcome to Jettamil

துறைமுகத்தில் 800 கொள்கலன்கள் குவிப்பு

Share

சுங்கத்துறை சோதனைகள் காரணமாக சுமார் 800 கொள்கலன்கள் துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பல் முகவர்கள் சங்கத்தினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக துறைமுகத்தின் பெரும் பகுதியை உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, இந்தக் கொள்கலன்களை விரைவாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுங்க மற்றும் துறைமுக அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் போது துறைமுகம் மற்றும் உள்நாட்டு சுங்க நடவடிக்கைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக சர்வதேச தரத்திலான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கப்பல் நிறுவனங்கள் தாங்கள் பெறும் சேவைகளுக்கு 70 மில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என்று கப்பல் முகவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக பணத்தை செலுத்த முடியாத பட்சத்தில் தீவுத்திடலுக்கு வரும் கப்பல்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் இணங்கியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை