2025 ல் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்!
2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விசித்திரமான சம்பவம், ஹாங்காங்கில் இருந்து பயணித்த கேத்தே பசிபிக் விமானத்தில் நேர்ந்தது.
இந்த விமானம் 01-01-2025 ஆம் திகதி ஹாங்காங்கில் இருந்து பயணத்தைத் தொடங்கி, 31-12-2024 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்துள்ளது. இதன் மூலம், இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து வந்த காலப்பயணம் என குறிப்பிடப்படுவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
சர்வதேச திகதிக் கோடு (IDL), பசிபிக் பெருங்கடலின் குறுக்கே வரையப்பட்டுள்ள ஒரு கோடு ஆகும். இந்த கோட்டினைக் கடக்கும் பயணிகள், திகதியின் அடிப்படையில் காலப்போக்கில் முன்னோக்கி அல்லது பின்னோக்கி பயணிக்கின்றனர்.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகள், IDLஐ கடக்க காரணமாக, 2 முறை புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அவர்கள், 1ம் ஜனவரி 2025 அன்று ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, 31ம் டிசம்பர் 2024 மாலை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை சென்றடைந்தனர்.