ஜூன் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்த மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 2ம் திகதி 2 மணி நேரமும், ஜூன் 3ம் திகதி 2 மணி நேரமும், ஜூன் 4ம் திகதி 1 மணி நேரமும் மின்வெட்டு குறித்த மின் வெட்டை அமுல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஜூன் 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவினால் குறித்த மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாக்கிகள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான மின்வெட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.