Welcome to Jettamil

ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம்

Share

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை