Welcome to Jettamil

வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்

Share

வடமாகாண ஆளுநர் சாள்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் செயலகத்தால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் கோவிந்தன் கருணாகரன் , தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம் ஏ சுமந்திரன் ஈழ மக்கா ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோ எம்பி ஆகிய இருவர் மட்டும் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை