Welcome to Jettamil

ஆயிரம் ரூபாவைத் தாண்டப் போகும் அரிசி விலை?

Share

எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஒரு கிலோ அரிசியின் விலை, ஆயிரம் ரூபாவைத் தாண்டும் என்று கூட்டு விவசாய அமைப்புகளின் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பெரும்போக பயிர்செய்கைக்குத் தேவையான உரத்தை பெற்றுக் கொடுப்பது பொறுப்புகூற வேண்டியவர்களின் கடப்பாடாகும் என கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் செயலாளர் புஞ்சிரால ரத்நாயக்க, வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமது யோசனைகளின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உரத்தை இறக்குமதிச் செய்து கொள்வதற்காகவேனும், இலங்கைக்கு டொலர்களை அனுப்புமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், ஒக்டோபர் மாதமளவில், நாட்டில் அரிசி தட்டுப்பாடு கட்டாயம் நிலவும் என்றும் கூறினார்.

இரசாயன உர இறக்குமதியை தடை செய்வதற்கு ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தின் காரணமாக, விவசாயிகள் இவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று கூட்டு விவசாய அமைப்புகள் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா குற்றம்சாட்டினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை