Welcome to Jettamil

பதவி விலகுமாறு பிரதமர் ரணிலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Share

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி, அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிளவர் வீதியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக நேற்றிரவு 7.30 மணியளவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமரைப் பதவி விலகுமாறு கோசங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது.

இதனால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், விசேட பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டது.

கலகத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள்,  பிரதமரின் இல்லத்தை நெருக்க முடியாமல் தடை செய்யப்பட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை