வரலாற்றுச்சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் காலை உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
கந்தசஷ்டி விரத இரண்டாவது நாள் உற்சவத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்தசஷ்டி விரதத்தின் இரண்டாவது நாள் உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.