பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron), நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளார்.
2 மாதங்களுக்கு முன்னர், பிரான்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நாடாளுமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் 577 இடங்களில் மக்ரோனின் மத்திய-வலதுசாரிக் கட்சியினருக்கு 234 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
அறுதிப் பெரும்பான்மையை அமைப்பதற்கு 289 இடங்கள் தேவைப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்ட இடசாரி நுபெஸ் (NUPES) கட்சிக்கு 141 இடங்களும் வலசாரி தேசியப் பேரணிக் கட்சிக்கு 90 இடங்களும் கிடைத்தன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கவில்லை என்று பிரான்ஸின் நிதியமைச்சர் கூறினார்.
இதனால், அவரது ஆட்சியில் இரண்டாவது தவணைக்காக வகுக்கப்பட்ட திட்டங்களும் சீர்த்திருத்தங்களும் நிறைவேறாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.