கோவிட் நோய்ப்பரவல் முடியும் நிலையில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020இல் தொடங்கிய கோவிட் நோயைப் பற்றி நிறுவனம் மிக நம்பிக்கையான கருத்துகளை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறை.
இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாடுகள் கிருமித்தொற்றுக்கு எதிரான கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமைச் செயலாளர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) கூறினார்.
எதிர்காலக் கிருமிப்பரவலுக்கும் அது பொருந்தும் என்றும் அவர். தெரிவித்தார்.
கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் பல நாடுகளில் பரிசோதனை மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்திருப்பதால், உண்மையான எண்ணிக்கையைப் பெறுவது கடினம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.