Welcome to Jettamil

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி

Share

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது.

முதல் 2 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.

3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில்,  முதலில் துடுப்பெடுத்தாடிய  மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் எடுத்தது.

கைல் மேயர்ஸ் 120 ஓட்டங்களையும்,  ஷமர்க் புருக்ஸ் 101 ஓட்டங்களையும் எடுத்தனர். இவர்களின் முதல் சதம் இதுவாகும்.

இதையடுத்து, 309 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 89 ஓட்டங்களும், விக்ரம் ஜித்சிங் 54 ஓட்டங்களும், மூசா அகமத் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டித்தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை