Welcome to Jettamil

பிரதமர் பதவி விலகத் தேவையில்லை – ஹரிணிக்கு ஆதரவாக மஹிந்த ராஜபக்ஷ கருத்து!

Share

பிரதமர் பதவி விலகத் தேவையில்லை – ஹரிணிக்கு ஆதரவாக மஹிந்த ராஜபக்ஷ கருத்து!

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக சர்ச்சை காரணமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என நான் கூறமாட்டேன் என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், அரசியல் ரீதியாக ஒருவரை பதவி விலகக் கோருவது தீர்வாகாது என்றும், அரசாங்கம் தனது செயற்பாடுகளைப் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எழும் பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியிலான வழிகளிலேயே தீர்வுகள் தேடப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்ட விவகாரத்தில், கல்வி அமைச்சிற்குப் பொறுப்பான பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தயாரித்து வரும் சூழலில், மஹிந்தவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை