Welcome to Jettamil

அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் மகிந்த அமரவீர உறுதி

Share

தற்போது, யால பருவத்தில், நெற்பயிர்ச்செய்கை, 90 வீதமாக அதிகரித்துள்ளதால், அதிக நெல் அறுவடை கிடைக்கும் எனவும், சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜூன் முதல் வாரத்தில், நாட்டில் நெற் பயிர்ச்செய்கை, சுமார் 2இலட்சத்து 77 ஆயிரம் ஹெக்டேர் ஆக இருந்தது.

ஆனால் தற்போது அது சுமார் 5 இலட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததை விட, இந்த ஆண்டு பருவத்தில் நெற் பயிர்ச்செய்கை, அளவு அதிகரித்துள்ளது.

எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்பட தேவையில்லை.

தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப, நெல் சந்தைப்படுத்தும் சபை, அரிசி ஆலைகள் மூலம் அரிசியை சந்தைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.

அடுத்த சில நாட்களில் 2,400 மெட்ரிக் தொன் அரிசி சந்தைக்கு விடப்படும்.

நேற்று முன்தினம் சதொச நிறுவனத்திற்கு 500 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் மேலும் 2,400 மெட்ரிக்தொன் அரிசி விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை