Welcome to Jettamil

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வர: பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் நேபாளம் நோக்கிப் பயணம்!

Share

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வர: பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் நேபாளம் நோக்கிப் பயணம்!

“கணேமுல்ல சஞ்சீவ” கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை நேபாளத்திலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கிப் பயணித்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், நேபாள அரசாங்கம் மற்றும் சர்வதேசப் பொலிஸாரின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன், அவருக்கு உதவிய ஜேகே பாய் உட்பட மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நாடு கடத்தும் நடவடிக்கை

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகவே, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் இன்று புதன்கிழமை (அக்டோபர் 15) நேபாளம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் எனப் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை