Welcome to Jettamil

வடக்கில் அர்ச்சுனாவை கண்டு அரச அதிகாரிகள் பதற்றம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

Share

வடக்கில் அர்ச்சுனாவை கண்டு அரச அதிகாரிகள் பதற்றம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்குத் (யாழ்ப்பாணத்துக்கு) தேவைக்கு அதிகமாக நிதி அனுப்பப்படுவதாகவும், ஆனால் அதில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் மத்திய அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பப்படுவதாகவும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நினைத்து அரச அதிகாரிகள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி குறித்த அதிர்ச்சித் தகவல்

கடந்த அரசாங்கங்களில் யாழ் மாவட்டத்தின் விவசாயத் தேவைகளுக்காகச் சராசரியாக 150 மில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டது வழக்கம்.

ஆனால், இந்த வருடம் இதில் சுமார் நான்கு மடங்கு அதிகமான தொகை வடக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட அந்த நிதியில் தேவையான பணிகள் செய்து முடிக்கப்படாமல், பெருமளவிலான தொகை மத்திய அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனாவைக் கண்டு அதிகாரிகள் அச்சம்

வடக்கிற்கு அனுப்பப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி விடுவாரோ என்பதே அவர்களின் பிரதான அச்சமாக உள்ளது.

தமிழர் தரப்பில் காலம் காலமாக அரசியல் செய்து வரும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில், ஒரு தனி மனிதனைக் கண்டு அரச அதிகாரிகள் பயப்படுவது, அங்குள்ள மற்றத் தமிழ் தலைமைகள் மீது பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை