இன்றைய வானிலை அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் மழை தற்காலிகமாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை நேரத்தில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.