இன்றைய வானிலை முன்னறிவிப்பு !
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், வடமேல் மாகாணத்தில் சிறிது அளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மாலையோ அல்லது இரவோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தில் சில இடங்களில் காலை நேரம் பனிமூட்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் மழை பெய்யும் நேரங்களில், அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னலினால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளைத் தடுக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.