புங்குடுதீவு மீண்டும் புதுப்பொலிவுடன் சுற்றுலாத்தளமாக மிளிர்கிறது
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பங்களிப்புடன், புங்குடுதீவு தற்போது ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. முன்னைய நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒன்றிய பணத்துடன், முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்களின் சில சிறிய நிதி பங்களிப்புகளின் மூலம் புங்குடுதீவில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த காலங்களில் சுவிஸ் ஒன்றியத்தால் நிர்மாணிக்கப்பட்ட மயானங்களான மணற்காடு, வல்லன், ஊரதீவு ஆகியவற்றை புனரமைத்து துப்பரவாக்கியுள்ளதுடன், புங்குடுதீவின் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் பெருக்குமர பிரதேசமும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டு, புதிய நடைபாதைகள் மற்றும் கடற்கரைக்கான நடைபாதைகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகள் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த செயற்பாடுகள், சுவிஸ் ஒன்றியத்துக்கு மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவில் வசிக்கும் திரு. தீபன் குணபாலசிங்கம் மற்றும் சுவிஸ் வாழ் திரு. ரஞ்சன் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெருக்குமர சுற்றாடலுக்கான பழுதடைந்த வட்டக்கொட்டகையை புதிதாக அமைத்து, மீண்டும் செயல்படுவதாக திரு. தீபன் மற்றும் அவரது குடும்பம் பணியாற்றியுள்ளனர்.
சுவிஸ் ஒன்றிய இலங்கை செயற்பாட்டாளரான முன்னாள் அதிபர் திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் மேற்பார்வையிட்டு, அந்த நிகழ்வில் முன்னணி விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், மற்றும் பல அறியப்பட்ட சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, பெருக்குமர விளம்பர செயற்பாட்டுக்கு தமது பெற்றோர்களான புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் பிறந்து ஆறாம் வட்டாரத்தில் வாழ்ந்த அமரர்கள் பாலசிங்கம் நாகம்மா அவர்களின் நினைவாக அவர்களின் பிள்ளைகளாக சுவிஸ் வாழ் திருமதி. தயாபரன் வசந்தி குடும்பம் நிதி பங்களிப்பு வழங்கியதையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செயல்பாடுகள், புங்குடுதீவை மீண்டும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன.