Welcome to Jettamil

பிரித்தானியாவில் தாய் மற்றும் 22 வயது மகனுக்கு நேர்ந்த பரிதாபம்

Share

பிரித்தானியாவில் கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் B5057 செஸ்டர்ஃபீல்ட்(Chesterfield) சாலையில் கருப்பு BMW ஒன்று பாதிக்கப்பட்டவரின் Fiat 500 கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.

இதில் 59 வயது பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவரது 22 வயது மகன் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக பின்னர் டெர்பிஷயர் பொலிஸார் அறிவித்தனர்.

இஸ்ரேலுக்கு வரும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள்

40 வயது நபர் கைது

இந்நிலையில் 40 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து தொடர்ந்து பொலிஸ் விசாரணையில் வைத்துள்ளனர்.

சாரதி தப்பியோட்டம்

ஆனால் விபத்து ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து சென்ற கருப்பு BMW-வின் சாரதி இன்னும் கைது செய்யப்படவில்லை.

கருப்பு BMW-வின் சாரதியை பிடிக்க டெர்பிஷயர் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விவரம் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு : ஐபோன் பாவணையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை