Welcome to Jettamil

நைஜீரியாவில் கோர விபத்து: படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாப பலி!

Share

நைஜீரியாவில் கோர விபத்து: படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாப பலி!

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் (Yobe) பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜிகாவா மாநிலத்தின் அதியானி கிராமத்திலிருந்து 52 பயணிகளுடன் புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தின் கார்பி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான எஞ்சிய 14 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படகில் ஏற்பட்ட கசிவு (Leakage) காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை வாராந்த சந்தை நாள் என்பதால், பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகோட்டி உயிர் பிழைத்திருந்தால், கவனக்குறைவாகச் செயற்பட்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை