கொழும்பில் ரயில் தடம் புரண்டது!
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23, 2025) காலை ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை சுமார் 9:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.






