யாழ்ப்பாணம்- அரியாலையில், ரயில் மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில் கார் மீது மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் விபத்தில் சிக்கியவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
விபத்தில் சிக்கிய வாகனம், வடமேல் மாகாணப் பதிவைக் கொண்டிருந்ததுடன், உயிரிழந்தவர்களும் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.