Welcome to Jettamil

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!  – இருவர் உயிரிழப்பு

Share

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் இடம்பெற்ற தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியின்போது நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அந்த நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து காரணமாக மீதமுள்ள கண்காட்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டன என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை