Welcome to Jettamil

திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு இடையூறு – கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல்!

Share

திருகோணமலை – சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலையுடனான பேரணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திலீபனின் உருவ சிலையுடன் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் மீது திருகோணமலை – சர்தாபுர பகுதியில் சிலரினால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை