தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவை சுமந்த ஊர்திப்பவனி இன்று காலை யாழ். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியை சென்றடைந்தது.
அங்கு சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் அல்லைப்பிட்டி படுகொலை நடந்த தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஊர்திப்பவனி சென்றடைந்தது.
அங்கு அருட்தந்தை றெக்னோ அடிகளாரின் தலைமையில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.