Welcome to Jettamil

வட்டுக்கோட்டை சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்!

Share

வட்டுக்கோட்டை சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்!

நேற்றையதினம் (05) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவிற்கான விசேட சந்திப்பு வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த சிவில் பாதுகாப்பு குழுவானது கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது செயற்பாடற்று காணப்படுகின்றது. அந்தவகையில் அதனை மீண்டும் இயங்கவைக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஒவ்வொரு செயற்றிட்டம் ஆரம்பிக்கும்போதும் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் கூட்டங்களை மட்டும் நடாத்துவதோடு நின்றுவிடாமல், மக்கள் கூறுகின்ற பிரச்சினைகள் பொலிஸார் தட்டிக் கழிக்காமல் முழுமையாக கிரகித்துவிட்டு அதற்கு ஏற்பட செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் பாதுகாப்பு குழுவினர் முன்வைத்தனர்.

ஊர்காவற்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களில் உள்ளவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை