Welcome to Jettamil

சுகாதார சீர்கேடு. உணவகத்திற்கு எச்சரிகையுடன் 20,000/= தண்டம்!

Share

சுகாதார சீர்கேடு. உணவகத்திற்கு எச்சரிகையுடன் 20,000/= தண்டம்!

அக்கராயன் பொது சுகாதார பரிசோதகர் இ. விதுசன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 23ம் திகதி அக்கராயனில் உள்ள உணவகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, ஏற்கனவே பொது சுகாதார பரிசோதகரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் சுகாதார சீர்கேடான நிலையில் ஓர் உணவகம் இயங்குவது அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து உணவக உரிமையாளரிற்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் இ. விதுசனால் 04.11.2025 அன்று வழக்குதாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதவான், கடை உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையுடன், 20,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை