உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மீண்டும் ஒருமுறை போர்முனைக்குச் சென்று தமது நாட்டுப் படையினரைச் சந்தித்துள்ளார்.
மெகோலயேவ் (Mykolaiv), ஒடேசா (Odesa) நகரங்களுக்கு அவர் சென்றிருந்தார்.
அங்குள்ள உக்ரேனிய வீரர்கள் கருங்கடல் கடற்கரையோரப் பகுதிகளை ரஷ்யத் தாக்குதலில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
உக்ரேனியப் படையினர் துணிவுடன் சேவையாற்றி வருவதாகக் கூறிய ஸெலன்ஸ்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். உக்ரேன் இந்தப் போரில் வெற்றி பெறுவது உறுதி என்று அவர் சூளுரைத்தார்.