Welcome to Jettamil

185 பேருடன் புறப்பட்ட விமானத்தின் இயந்திரத்தில் தீவிபத்து

Share

டில்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், இயந்திரத்தில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 185 பேருடன் பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டில்லிக்கு புறப்பட்டது.

சிறிது நேரத்தில் இடது பக்க இயந்திரத்தில் தீ பிடித்ததை அடுத்து, விமானி அதனை அவசரமாக மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,  இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை