Welcome to Jettamil

யார் இந்த பஸ் லலித்? – டுபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேசக் குற்றவாளி!

Share

யார் இந்த பஸ் லலித்? – டுபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேசக் குற்றவாளி!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்பவரே “பஸ் லலித்” என்று அழைக்கப்படுகிறார். இவர் சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி ஆவார். சமீபத்தில் டுபாயில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பஸ் லலித்” உயிரிழந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களான “சமயன்” மற்றும் “ஊரு ஜூவா” ஆகியோரின் முக்கிய சகா ஆவார். இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“பஸ் லலித்” மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:

“புருமுணா” என்று அழைக்கப்படும் ரவிந்து சங்ப டி சில்வா என்பவரைக் கொலை செய்தல்.

2022ஆம் ஆண்டில் ஹங்வெல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்தல்.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் மற்றுமொரு வர்த்தகரைக் கொலை செய்தல்.

2023ஆம் ஆண்டில் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்தல்.

2024ஆம் ஆண்டில் ஹங்வெல்ல பகுதியில் வஜிர நிஷாங்க மற்றும் மன்னா ரொஷானின் சகோதரனைக் கொலை செய்தல்.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ ஹேவத்தைக் கொலை செய்தல்.

2025ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி கொடஹெர பொட்டா மற்றும் தெமட்டகொடை ருவான் ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்தல்.

மிரட்டி கப்பம் பெறும் சம்பவங்கள் 15 பதிவாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளே “பஸ் லலித்” மீது முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை