Sunday, Jan 19, 2025

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இளைஞர்கள்-மத்தியவங்கி அதிர்ச்சி தகவல்..!

By kajee

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இளைஞர்கள்-மத்தியவங்கி அதிர்ச்சி தகவல்..!

திறன்மிக்க இளைஞர்களின் புலம்பெயர்வு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.

இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.

தற்போது கணிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் குறுகிய காலத்திற்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதாரம் படிப்படியாக நிலையான வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு