Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

கில்மிசாவிற்கு அவரது தாயரது பிறந்த ஊரில் அமோக வரவேற்பு

கில்மிசாவிற்கு அவரது தாயரது பிறந்த ஊரில் அமோக வரவேற்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு இளங்கே சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவின் தாயாரது பிறந்த இடமான அல்வாய் வடக்கில் இடம் பெற்றது.

அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் விழா ஏற்பாட்டு குழு தலைவர், ஓய்வு பெற்று யாழ் கல்வி வலைய உதவி கல்வி பகுப்பாளர் முருகேசு அனாதரட்சகன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக அல்வாய் நாவலடி சந்தியிலிருந்து திறந்த வாகனத்தில் மங்கல இசை முழங்க அழைத்து வரப்பட்டு இளங்கே சனசமூக நிலைய கலை அரங்கில் மங்கல சுடர் ஏற்றல்களுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, என்பவற்றை தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம் பெற்றன.

வாழ்த்துரையினை நிகழ்ச்சியின் பிரதம விருந்தினரும் மன்னார் மாவட்ட செயலர் க.கனகேஸ்வரன், மருத்துவ கலாநிதி வே.கமலநாதன், கோப்பாய் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார், சுவாமி விபுலானந்தா அழகியல் கட்டைகள் நிலைய விரிவுரையாளர் கலாநிதி சியாமளங்கி கருணாகரன், குருக்கட்டு அரசடி விநாயகர் ஆலய தலைவர் பேரம்பலம் வரோதயன், வடமராட்சி பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் கொத்தணி பொது முகாமையாளர் முருகேசு நவநேசன், கரவெட்டி பிரதேச வைத்திய சாலை வைத்திய அதிகாரி வேலுப்பிள்ளை கமலநாதன், உட்பட பலரும் நிகழ்த்தினர்.

இதில் அல்வாய் வடக்கு மக்கள், மட்டுமல்ல வடமராட்சியின் பல பகுதியிலிருந்தும் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related posts

எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்

Sinthu

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

Leave a Comment