டெல்டா வைரஸ் தொற்று சமூகத்தில் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டை திறந்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு வார காலம் நாடு முடக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து பயணத்தடையை தளர்த்த நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரோக்கியமான நிலையொன்றில் நாடு இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூகத்தில் ஒரு சில பகுதிகளில் டெல்டா வைரஸ் தொற்று பரவுள்ள நிலையில் மீண்டும் தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என்றே நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.