க.பொ.த உயர் தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் – தரம் 5 பரீட்சைகள் இந்த ஆண்டு ஆகஸ்டில் இடம்பெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் மூலம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இணைய வழி தொழிநுட்பத்தின் ஊடாக அனைத்து மாகாணப் பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சரியான முறையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாமல் மற்றும் பாடத்திட்டம் பூர்த்தி செய்யப்படாமல் மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் பரீட்சையை நடாத்துவது நியாயமில்லை என்று குறித்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது வரை, 5-ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் என்பன நடைபெறும் திகதிகள் முடிவு செய்யப்படவில்லை என்றும் சனத் பூஜித கூறியுள்ளார்.