Welcome to Jettamil

கனடா – அமெரிக்க நில எல்லை ஒருமாத காலம் மூடப்பட்டிருக்கும்!

Share

கனடா- அமெரிக்க நில எல்லை ஒருமாத காலம் வரை தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்தபடி இந்த அறிவிப்பினை, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கும் அமெரிக்காவிற்கும் 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி வரை நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துகிறோம்.

கனடியர்களை கொவிட்- 19 இலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க கிடைக்கக்கூடிய சிறந்த பொது சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் எங்கள் முடிவுகளை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

முதல் கொவிட் அலைகளில் வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதலில் கொண்டு வரப்பட்டன. இதன்படி, எல்லைக் கடப்புகள் ஒரு வருடத்திற்கும் மேலாக அத்தியாவசியமற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை