Welcome to Jettamil

கொரோனா பரவலுக்கு மத்தியில் 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை!

Share

கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் 19 இலங்கையர்களும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்கள் உட்பட 35 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இலங்கைக்கு வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை