நல்லூர் – செம்மணி இந்து மயானத்தில் வெடிக்காத நிலையில் பல வெடிமருந்து பொருட்கள் இருப்பதாகக் கூறி அங்கு சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
செம்மணி வீதியின் வட பகுதியில் உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் காலை இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.