Welcome to Jettamil

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு !

Share

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் நடத்திய ஆலோசனையின் பின்னர் தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை