அநுராதபுரம் புதிய க்ரிட் (Grid) உப மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வட மாகாணத்திற்கான மின்சார விநியோகம் இன்று மாலை (08) 7 மணி அளவில் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், வாழைச்சேனை, ஹபரணை, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய Grid உப மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.
இதன் காரணமாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.